Help required to test the new tamilblog list arrangement
அன்புள்ள வலைப்பதிவரே,
ஏற்கனவே இங்கு குறிப்பிட்டிருந்தபடி, தமிழ் வலைப்பதிவுகள் பட்டியலை மேம்படுத்தி, வாசகருக்கு மேலும் புதிதாக வசதிகளை அளிக்கும் முகமாகவும், அதை எளிதாக நிர்வகிக்க ஏதுவாகவும், தேவையான கருவிகளை நான் சோதனை முறையில் கீழ்க்கண்ட முகவரியில் அமைத்திருக்கிறேன். நேரமும் ஆர்வமும் உள்ள நண்பர்களிடம் இதை சோதித்து மேம்படுத்த உதவியை எதிர்பார்க்கிறேன். இந்த முயற்சியில் ஈடுபட நேரமோ/விருப்பமோ இல்லாதவர்கள் மேற்கொண்டு வாசிக்க அவசியமில்லை.
இப்போது அமைக்கப்பட்டுள்ள வசதிகள்:
====================
வாசகரின் பார்வையில்:
====================
1. பட்டியலை வரிசைக்கிரமப் படுத்தாமல் காட்டுதல்: (Random ordered list) ஒரு சில பதிவுகளே முதலில் கண்ணில் படுவதையும், பெயரின் முதல் எழுத்து செய்யும் சூழ்ச்சியால் கடைசி வரிசைக்கு சிலர் தள்ளப்படும் நிலையைத் தவிர்க்கவும் ஒரு முயற்சி.
2. வாசகர் விருப்பப்படி தலைப்பு, வலைப்பதிவர் பெயர், தொடங்கிய தேதி, முதலான பலவகைகளில் வரிசைப்படுத்திக் கொள்ளும் வசதி.
3. இப்படி வரிசைப்படுத்திய பட்டியலின் செய்தியோடைத் தொகுப்பை ஒரு OPML கோப்பாகத் தயாரித்து இறக்கிக் கொள்ளும் வசதி.
========================================
வலைப்பதிவரின் பார்வையில்:

1. புதிய வலைப்பதிவுகள் தொடங்குபவர்கள் அவற்றைப் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துக் காத்திருக்க வேண்டியதில்லை. தாங்களே தங்கள் தகவல்களை உள்ளிட்டதும் உடனடியாக பட்டியலும், செய்தியோடைத் தொகுப்பும்(OPML) உடனடியாக இதைப் பிரதிபலிக்கும்.
2. உள்ளிட்ட தகவலை முன்பார்வையிடும் வசதி. இதன் மூலம், எழுத்துப்பிழைகள் தவிர்க்ப்படும். முன்பார்வையிடும்போது, வலைப்பதிவு மற்றும் செய்தியோடை ஆகியவற்றின் முகவரிகள் சுட்டிகளாகக் காட்டப்படுவதால், அவற்றை சோதித்து சரிசெய்ய வாய்ப்பு. (http://www.someone.blogpsot.com/ போன்ற இலவச மெய்யுணர்வு சேவைகளிடமிருந்து தப்பிக்கலாம்)

பட்டியல் நிர்வாகியின் பார்வையில்:

1. அவ்வப்போது குப்பைத்தகவல்களைக் களைவது தவிர்த்து, மற்றபடி நேர நெருக்கடியும் அயற்சியும் ஏற்படுத்தாத பணிகள்.
2. அனைவருக்கும் மேம்பட்ட சேவை, திருப்தி.

இந்த சோதனை/மேம்படுத்தல் முயற்சியில் ஆர்வமுள்ள நண்பர்களை
http://www.thamizmanam.com/Tutorial/tb_list.php
என்ற முகவரிக்கு அழைக்கிறேன்.
நீங்கள் செய்யவேண்டியது:
1. இந்தப் பட்டியலை வாசகர் பார்வையில் பார்த்து, எல்லாம் சரியாக இயங்குகிறதா, பல இயங்குதளம்/உலாவி வடிவங்களிலும் சரியாக இருக்கிறதா என்று சோதித்தல்
2. வலைப்பதிவர் பார்வையில் பார்த்து, புதிய தகவலைச் சேர்த்தல் சரியாக இருக்கிறதா என்று சோதித்தல்.
3. குறைகள்/ஆலோசனைகள் இருப்பின் பகிர்ந்துகொள்ளுதல்.
இங்கே இன்னும் முடிக்கவேண்டிய இரண்டு பணிகளைச் சொல்லவேண்டும்:
- பக்கத்தை அலங்கரித்தல், பலவகை சுட்டிகள் கொடுத்தல் போன்றவை
- புதிய தகவலை 'வெற்றுத்தரவுகள்' போன்றவற்றிற்காக சோதித்து, பின் சேமித்தல்.
இந்த இரண்டும் கூடிய விரைவில் செய்யப்பட்டு விடும். ஏற்கனவே இருக்கும் தகவலில் மாற்றங்களை, வலைப்பதிவர் தாமாகவே செய்துகொள்ளும் வசதி இன்னும் பலநாள் பிடிக்கும்.
இதில் பிறப்பிடம்/வசிப்பிடம் என்று ஒரு புதிய தகவலை சேர்த்துள்ளேன். அதில் உள்ள இடப்பெயர்கள், நிலப்பகுதியைக் குறிக்கும் (ஒரு நாட்டை அல்ல). புனைவு ஆக்கங்கள் தவிர்த்து, பொதுவான எண்ணப் பகிர்வு, சிந்தனை சேமிப்பு என்று வரும்போது, அவரவர் பின்புலம் கட்டாயம் வாசகருக்கு ஒரு கூடுதல் தேர்வை அளிக்கும் என்பது என் எண்ணம். உதாரணமாக, அமெரிக்காவை வசிப்பிடமாகக் கொண்ட ஒருவர் அதே வசிப்பிடம் கொண்டவர்களின் வலைப்பதிவைப் படிக்க நாட்டம் கொள்ளளாம். அதே போல இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒருவர், அதே பிறப்பிடம் கொண்டவர்களின் பதிவுகளைப் படிக்க ஆர்வமாய் இருக்கலாம். ஒருவர் தன்னை இம்மாதிரி எல்லைகளுக்கு அப்பாற்பட்டவராக எண்ணினால், தங்கள் பிறப்பிடம்/வசிப்பிடத்தை பொதுவான 'யாதும் ஊரே' என்று சொல்லிக்கொள்ள முடியுமாறு அமைத்திருப்பதால், இது வேறு பிராந்தியவாத தர்க்கங்களைக் கிளப்பாதென்று நம்புகிறேன்:)
இந்தச் செய்தியை கீழ்க்கண்ட வலைப்பதிவிலும் இடுகிறேன். இது சம்பந்தமான உரையாடல்களைப் பொதுவில் வைக்கவும், கோர்வையாக வாசிக்கவும் வசதியாக, அந்த வலைப்பதிவிலேயே மேலும் உங்கள் மறுமொழிகளை இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதில் சிக்கல் இருப்பவர்கள் யா¥ குழுமத்திற்கே பதில் எழுதலாம்.
http://tamilblogs_db.blogspot.com
மிக்க நன்றியுடன்,
-காசி
Update:
Selva,
Thanks. Please see this bloglines screen's snapshot. I thought such grouping helps a simple view, and less need to scroll all the down to see which blog has been updated now. But I don't follow any logic in grouping. Just put every 10 in a group. Please share your views on this.

11 Comments:
நல்ல பணி. மேம்போக்காகப் பார்த்ததில் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. ஏதேனும் தென்பட்டால் சொல்கிறேன்.
By
பரி (Pari), at 11:40 AM
அன்பின் காசி, சிறப்பான பணியைச் செய்து வருகிறீர்கள். OPML கோப்பை இறக்கி Bloglinesல் ஏற்றிப் பார்த்தேன். நன்றாகவே இருக்கிறது.
ஒரு கேள்வி. Group1, Group2 என்று பிரித்திருக்கிறீர்களே. அதற்குக் காரணமும் முகாந்திரமும் இருக்கிறதா ?
By
இரா. செல்வராசு (R.Selvaraj), at 1:49 PM
Selva,
Thanks. Please see this bloglines screen's snapshot. I thought such grouping helps a simple view, and less need to scroll all the down to see which blog has been updated now. But I don't follow any logic in grouping. Just put every 10 in a group. Please share your views on this.
Once I know which group has the blog with recent post, I just expand that group to see the specific item. This way the number of lines will only increase by 10. What do you think?
By
Kasi Arumugam, at 2:57 PM
Thanks Kasi for this database.
I apologize in advance for my rambled thoughts below :)
1. Can you do the beautification quickly? That will make it as a one-point stop (in addition/instead of tamilblogs.blogspot)
2. Icon based categorization for different blogs
3. Flag based identification for countries
4. Removal of 'Yaathum oorey' :P ;;) from the country list. (IM humble O, it is redundant :)
5. All english titles, appear after the Tamil titles, when sorted on 'Blog heading'
6. Can you give options to add all of them to IE favorites or Netscape bookmarks? In that way the favorites or bookmarks could be automatically updtaed on a later day.
7. Option to show their latest blog post in this page or on a different page.
8. Adding a photo of the blogger (where the person gives the permission to do so)
9. Different font sizes/attributes for some important columns?
A very useful implementation for all of us. Many many thanks Kasi.
By
Boston Bala, at 5:16 PM
நன்றி காசி. ஒரு குறிப்பு. எந்த முறையிலும் வரிசைப்படுத்தாமல் OPML தொகுக்கையில் ordered by blog title.... என்று வரும்படி அமைத்திருக்கிறீர்கள். ஆனால், தொகுப்பு ஒவ்வொரு முறையும் அதே வரிசையில் இல்லாமல், வேறு வேறு வரிசைமுறையில் அமைகிறது.
இதனால், இங்கே பல groups ஆகப் பிரித்திருப்பதால், ஒவ்வொரு முறையும் ஒரே செய்தியோடையை bloglines போன்றவற்றில் பல முறை சேர்க்க நேர்ந்துவிடும் (in multiple groups).
மற்றபடி, இப்படி groups பிரிக்க வேண்டுமா என்பதை பயனர் தெரிவிற்கு விட்டு விடலாம். உ-ம். இன்று காலை நான் இங்கு உட்கார்ந்து எல்லா செய்தியோடைகளையும் முன்னரே என்னிடம் இருந்த ஒரு group்ற்கு நகர்த்தினேன். நீங்கள் சொல்வதும் ஒரு நல்ல காரணம் தான். 185 ஓடைகளை ஒரே இடத்தில் பார்ப்பது சற்று வசதிக் குறைவு தான் போலும்.
வகைப்படுத்துவதற்கு அகர வரிசை முறையை ஒருவேளை பயன்படுத்தலாம். பதிவர் பெயர்களைக் கொண்டு பார்த்தால், (tamilblogs.blogspot) பட்டியலின் படி 20 பிரிவுகள் வருகிறது.
அதே சமயம் பயனர் எந்த முறையில் வரிசைப்படுத்துகிறாரோ அதன்படி இந்த முறையை மாற்றலாம். உ-ம். தலைப்புப் படி வரிசைப் படுத்தினால், அதன் அகரவரிசை கொண்டு groups பிரிக்கலாம்.
சும்மா ஒரு யோசனை தான். வழக்கம் போல் இதன் நிறை குறைகளை நீங்களே அலசுவீர்கள் என்று நான் இங்கு சும்மா அள்ளி விட்டுப் போகிறேன். :-)
[weblogs.us்ல் என் வீடு படுத்துக் கொண்டது. அதை உயிர்ப்பிக்கக் காத்திருக்கிறேன்]
By
இரா. செல்வராசு (R.Selvaraj), at 5:28 PM
1. Can you do the beautification quickly? That will make it as a one-point stop (in addition/instead of tamilblogs.blogspot)
Yes, the plan is to avaoid duplication, so once this comes into existance, there will be no need to look at two different places.__________________________________________________
2. Icon based categorization for different blogs
Good idea, but since it is very difficult to categorize blogs based on content (except few, many are multi-focussed, so, there will be all sorts of icons hanging against every blog :)) I am not for this, at least for now.__________________________________________________
3. Flag based identification for countries
Since the location indicates geographic, not political entities, it will be difficult to show flags, unless all 150-odd countries are supported!__________________________________________________
4. Removal of 'Yaathum oorey' :P ;;) from the country list. (IM humble O, it is redundant :)
Yes, I am for it. I added that in the last moment, Let us see what others feel __________________________________________________
5. All english titles, appear after the Tamil titles, when sorted on 'Blog heading'
The sort order is not mine. It is MySQL database's ordering. I will find out how to solve this.__________________________________________________
6. Can you give options to add all of them to IE favorites or Netscape bookmarks? In that way the favorites or bookmarks could be automatically updtaed on a later day.
I hope it is possible. I will keep in mind and provide as and when possible__________________________________________________
7. Option to show their latest blog post in this page or on a different page.
Part of long-term plan. Will take time, but will certainly come__________________________________________________
8. Adding a photo of the blogger (where the person gives the permission to do so)
:) Not difficult, reserved for future.__________________________________________________
9. Different font sizes/attributes for some important columns?
Will be improved__________________________________________________
Thanks Balaji.PS: I forgot to thank Pari. Pari, Thanks. (will be in bold, once you tell something as promised :))
By
Kasi Arumugam, at 9:17 PM
அன்புள்ள செல்வா,
பாலாஜிக்கு பதில் இட்டுவிட்டு உங்கள் பகுதிக்கு வரும் முன், சில வேலைகள் குறுக்கிட, அதை முடிக்கும் போது கடும் தலைவலி. எனவே உடனே முடியவில்லை. இன்று பதில் தருகிறேன். பொறுத்தருள்க!
அன்புடன்,
-காசி
By
Kasi Arumugam, at 8:16 AM
நன்றி செல்வா.எந்த முறையிலும் வரிசைப்படுத்தாமல் OPML தொகுக்கையில் ordered by blog title.... என்று வரும்படி அமைத்திருக்கிறீர்கள். ஆனால், தொகுப்பு ஒவ்வொரு முறையும் அதே வரிசையில் இல்லாமல், வேறு வேறு வரிசைமுறையில் அமைகிறது.
இதனால், இங்கே பல groups ஆகப் பிரித்திருப்பதால், ஒவ்வொரு முறையும் ஒரே செய்தியோடையை bloglines போன்றவற்றில் பல முறை சேர்க்க நேர்ந்துவிடும் (in multiple groups).
ஆமாம், செல்வா. இந்த opml கோப்பு தயாரிக்கும்போது, தேவையானவற்றை மட்டும் தேர்ந்தெடுக்க (ஒவ்வொன்றாக, அல்லது சில விதிகளுக்குட்பட்டு, உ.ம். கடந்த வாரம்/மாதம் ஆரம்பிக்கப்பட்ட பதிவுகள், அல்லது, தமிழகம் வாழ் பெருமக்கள் எழுதும் பதிவுகள்...) வசதி செய்யப்போகிறேன். அது வரும்வரை, இந்தக் கோப்பு *எல்லா*ப் பதிவுகளையும் தொகுக்கும். எனவே ஏற்கனவே இருக்கும் சந்தாக்களை ஒரு சொடுக்கில் அழித்துவிட்டு, இந்தப் புதிய கோப்பை உட்கார வைத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால், ஒரு ஐந்து/பத்துப் பதிவுகளுக்காக, நூறு-இருநூறு பதிவுகளையும் இறக்கி தேடிப்பிடித்து தேவையில்லாத *பெரும் எண்ணிக்கையிலான* பதிவுகளை (இரட்டையை தவிர்க்க வேண்டி) நீக்குவதும் கடினமான செயல்தானே. (group பிரிக்காமலே இருந்தாலும்.) மற்றபடி, இப்படி groups பிரிக்க வேண்டுமா என்பதை பயனர் தெரிவிற்கு விட்டு விடலாம்.
தேர்ந்தெடுக்கும் வசதி வரும் வரை, இதை செய்யலாம், செய்கிறேன். உ-ம். இன்று காலை நான் இங்கு உட்கார்ந்து எல்லா செய்தியோடைகளையும் முன்னரே என்னிடம் இருந்த ஒரு group்ற்கு நகர்த்தினேன். நீங்கள் சொல்வதும் ஒரு நல்ல காரணம் தான். 185 ஓடைகளை ஒரே இடத்தில் பார்ப்பது சற்று வசதிக் குறைவு தான் போலும்.
வகைப்படுத்துவதற்கு அகர வரிசை முறையை ஒருவேளை பயன்படுத்தலாம். பதிவர் பெயர்களைக் கொண்டு பார்த்தால், (tamilblogs.blogspot) பட்டியலின் படி 20 பிரிவுகள் வருகிறது.
அதே சமயம் பயனர் எந்த முறையில் வரிசைப்படுத்துகிறாரோ அதன்படி இந்த முறையை மாற்றலாம். உ-ம். தலைப்புப் படி வரிசைப் படுத்தினால், அதன் அகரவரிசை கொண்டு groups பிரிக்கலாம்.
ஆம், இது நல்ல முறைதான். இதுவும் செய்ய எண்ணமிருக்கிறது. அகரவரிசைப்படி அடுக்குவதிலேயே இன்னும் சில சிக்கல் இருப்பதால், இதை எப்போது செய்யமுடியும் என்று தெரியவில்லை சும்மா ஒரு யோசனை தான். வழக்கம் போல் இதன் நிறை குறைகளை நீங்களே அலசுவீர்கள் என்று நான் இங்கு சும்மா அள்ளி விட்டுப் போகிறேன். :-)
:))
[weblogs.us்ல் என் வீடு படுத்துக் கொண்டது. அதை உயிர்ப்பிக்கக் காத்திருக்கிறேன்]
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்!
By
Kasi Arumugam, at 6:31 PM
காசி
"எனவே ஏற்கனவே இருக்கும் சந்தாக்களை ஒரு சொடுக்கில் அழித்துவிட்டு,.."
இதில் இரண்டு சிக்கல்கள் உருவாகும் என்று நினைக்கிறேன்.
1. இந்த OPML கோப்பு தவிர வேறு சந்தாக்களை ஒருவர் வைத்திருந்தால் அதுவும் அழிக்கப்படும். அதற்குத் தான் தனிப் பிரிவாய் வைத்துக் கொள்ளச் சொல்கிறேன் என்கிறீர்களா? சரி தான். ஆனால் இன்னும் இந்தத் தரவுதளத்தில் பதிவு செய்து கொள்ளாத தமிழ்ப் பதிவுகளின் சந்தாவை ஒருவர் தானாக இந்தப் பிரிவில் சேர்த்திருக்கும் சமயங்களில் இது சிக்கல் தரும்.
2. சந்தாக்களை அழித்துவிட்டு மீண்டும் மொத்தமாய் உருவாக்கும் போது ஏற்கனவே படித்தவை என்கிற நினைவுநிலையை செய்தியோடைப் படிப்பான்கள் மறந்துவிடும். புதிதாய் வந்தவற்றை மட்டும் பார்ப்போம் என்று எண்ணுகையில் மீண்டும் 436 பதிவுகள் புதிது என்று பார்க்க நேர்ந்தால் சிரமம் தானே.
தலைவலி சரியாகி விட்டதா? இரவு முழுதும் உறங்காமல் PHPயில் உழன்று கொண்டிருந்தீர்களானால் அப்படித் தான் ஆகும் என்று மனைவி குத்துகிறார்களா ? :-)
By
இரா. செல்வராசு (R.Selvaraj), at 11:08 PM
அடடா, ஒரு பெரிய ஆராய்ச்சியே நடந்திருக்கே! நாந்தான் லேட். எல்லாம் சரியா நடந்தா சரி :-)
By
பரி (Pari), at 5:34 PM
காசி
நல்ல பணி.
பயன் எங்கள் எல்லோருக்கும்.
வாழ்த்துக்கள்
நட்புடன்
சந்திரவதனா
By
Chandravathanaa, at 2:54 AM
Post a Comment
<< Home